ரோஜாச்செடி போலவேதான் உறவுகள் என்றெண்ணி உறவுகளை விலத்தியிருந்த என் வாழ்வில் நுழைந்தாய் முட்களற்று வாசனை நிரம்பியஅழகு ரோஜாவாக...உனை கண்டநாள்முதல் நான் ஆனந்தம்கொண்டுதினமும் அலங்கரித்து மனம் மிகமலர்ந்தேன்அன்பே ரோஜா உன்னை கையில்பற்றிதுடியிடை தொடபலர் ஆசைபட சிலர் சொந்தமாக்கி முத்தமிட துடித்திட நான் மட்டும் உனை என் கண்களுக்குள் பொத்தி வைத்து அந்த முட்கள் நிரம்பிய ரோஜாப்பூவாகவே பார்த்தேன் ஏனெனில் நீயும் ஒருநாளில் உதிர்ந்துவிடுவாயோ என்று ஆனால்.. நீயோ உதிர்ந்திடாத ரோஜா என் வாழ்வின் ஆயுள்ரோஜா நிம்மதியை தந்திடும் ரோஜா அன்பான அழகான ரோஜா என்று நன்குணர்ந்தேன் நான் போலியான உறவுகள் போலல்லாத தோழியே என் அழகு ரோஜாவே நீ என்றும் வேண்டும் என்னருகே நீயின்றி நானில்லை ரோஜாவே.... !