அனைத்து வீடியோ இணையதளங்களிலும் இருந்து வீடியோக்களை தரவிறக்க
mathan |
12:24 AM |
0
comments
நண்பர்களே McAfee நிறுவனத்தில் இருந்து ஒரு வலைத்தளம் வந்திருக்கிறது. இது வரை மிகப்பெரிய இணையத்தள லின்குகளை மற்றவர்களுக்கு அனுப்புகையில் பின்வரும் http://tinyurl.com/ http://tweetburner.com/http://bit.ly/ http://snipurl.com/ http://budurl.com/ http://tr.im/ தளங்களில் ஏதாவது ஒரு தளம் வழியாக மிகப்பெரிய இணைய லின்குகளை சிறு லின்குகளாக மாற்றி அனுப்புவோம். இந்த தளங்களின் வரிசையில் புதிய McAfee நிறுவனம் ஆன்டிவைரஸ் எதிர்ப்பு மென்பொருளில் பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் அவர்களிடம் இருந்து வந்த இந்த தளம் மிகவும் பாதுகாப்பானது. இது இப்பொழுது Beta வரிசையில் வெளிவந்துள்ளது விரைவில் பீட்டாவிலிருந்து வெளிவருகிறது. இணையதள முகவரி
Hulu, Veoh, Boxee, Joost, YouTube, Yahoo Video, CBS, MTV போன்ற தளங்களிலிருந்து வீடியோவை தரவிறக்க ஒரு அற்புதமான மென்பொருள் மிக சுலபமான மென்பொருள் StreamTransport. நீங்கள் இந்த மென்பொருள் நிறுவினால் நீங்கள் காப்பி செய்யும் லிங்குகளை தானாகவே கண்டு கொள்ளும். இதன் வழியாக தரவிறக்கும் போது FLV, MP4 போன்ற கோப்பாக சேமிக்கவும் முடியும். தரவிறக்கம் முடிந்தவுடன் தானாக விண்டோஸ் ஷட்டவுண் செய்யும் வசதியும் உள்ளது. இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம். இந்த மென்பொருளை தரவிறக்க Download Link

சிசிகிளினர் வரிசையில் இன்னும் ஒரு மென்பொருள் ஸ்லிம்கீளினர் இது இப்பொழுது பீட்டாவாக பொதுமக்களுக்காக இலவசமாக தரப்பட்டு வருகிறது. இந்த மென்பொருள் மூலம் சிசிகீளினர் செய்யும் வேலைகள் மட்டுமன்றி கோப்புகளை பலதுண்டுகளாக பிரித்து நீக்கும் வசதியுண்டு. இந்த மென்பொருளை முயற்சித்து பார்க்க Download Link

நேஷனல் ஜியோகிராபிக்ஸ் தொலைக்காட்சியை விரும்பாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த தொலைக்காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வால்பேப்பர்களாக வெளியிட்டுள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அந்த வால்பேப்பர்களை தரவிறக்க இதோ ஒரு மென்பொருள் அவர்களிடமிருந்தே வருகிறது. இது பழைய வால்பேப்பர்க்ளையும் புதியதாக வரும் வால்பேப்பர்களையும் காட்டுகிறது. உங்களுக்கு பிடித்ததை தரவிறக்கிக் கொள்ளலாம். 50000க்கும் மேற்பட்ட வால்பேப்பர்கள் உள்ளது. மொத்தமாக தரவிறக்கும் வசதி உள்ளது. உங்களுக்கு தேவையான அளவுகளிலும் தேடி எடுத்துக் கொள்ளலாம். HD எனப்படும் உயர்தர வால்பேப்பர்களும் இதில் அடங்கும். இந்த மென்பொருளை இயக்க வேண்டாம் நேரடியாக இயக்கலாம். இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள். இந்த மென்பொருளை தரவிறக்க Download Link

நன்றி ! மீண்டும் ஒரு தகவலுடன் வருகிறேன் :மதன்
Category: Computer, software, Technology, மென்பொருள்








0 comments