500 MILLION நண்பர்கள் சம்பாதித்த கதை! - ஹாலிவூட்டிலும் காலடி வைத்த FACEBOOK

அக்டோபர் 1ம் திகதி வெளியான, 'த சோஷியல் நெட்வோர்க்' திரைப்படம் முதல் வாரத்திலேயே உலகளாவிய ரீதியில் நல்ல வசூலை குவித்துள்ளது.
டாவிட் பின்செர் (David Fincher) இயக்கத்தில் அன்ட்ரிவ் கர்பில்ட், ஜஸ்டின் திம்பர்லேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகன் ஜெஸ் எய்சென்ர்பெர்க் (Jesse Eisenberg), படத்தில் மார்க் சூகெர்பெர்க்காவே வாழ்ந்திருக்கிறார்.

கொலம்பியா பிக்சர்ஸ் சார்பில், அமெரிக்காவில் படம்பிடிக்கப்பட்ட இப்படத்தின் கதைவடிவமைப்பை பென் மெஷிரிச் உருவாக்கியிருக்கிறார்.
பேஸ்புக்கையும், ஷூக்கர் பெர்க்கையும் சுழன்றே கதை நகரும்.
2003 இல் தனது ஹவார்ட் பள்ளிக்காக உருவாக்கிய இணையதளம், 6 வருடங்களில் 500 மில்லியன் நண்பர்களுடன் உலகின் முன்னணி சமூகவலை இணையத்தளமாக மாறியதற்கு பின்னணியில் இருந்த ஆதரவையும், எதிர்ப்பையும் நிஜமாக நடந்த சம்பவ பின்னணிகளை கொண்டே உருவாக்கியிருக்கிறார்கள்.
உங்களால் சில எதிரிகளை சம்பாதிக்காமல், 500 மில்லியன் நண்பர்களை உருவாக்கமுடியாது என்பது இப்படத்தின் ஹைலைட் வாசகம்.
படம் திரையிடப்பட்ட முதல் வாரத்தில் 22,445,653 அமெரிக்க டாலர்கள் வருமானம் ஈட்டியது. அனைவருக்கும் நன்கு தெரிந்துவிட்ட ஒருவிடயத்தில், தெரியாமல் போன சுவாரஷ்யங்களை கதைக்கருவாக கொண்டு இயக்கியிருக்கும் வித்தியாசமான முயற்சி, ஹாலிவூட்டின் இன்றைய ஸ்டைலுக்கு புதுசு, என்பதால் படத்திற்கு எக்கச்சக்க பாராட்டு.

மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்
Category: FACEBOOK, THIRAI VIMARSANAM








0 comments