BEST FREE VIDEO EDITER
செல்பேசியில் வீடியோக்களை எடுத்து கணணியில் சேமிப்பவர்கள் நீங்களாயின் அவற்றை அழகாக எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்க விரும்புவீர்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் வீடியோவை ஆன்லைனில் வைத்தே எடிட் செய்ய உதவி செய்கிறது Jaycut என்ற தளம்.
ஏற்கனவே இந்த தளத்தை பற்றி சிலர் அறிந்திருக்கலாம் எனினும் தற்போது இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்புன் மூலம் வீடியோ எடிட்டிங்க் செய்வதில் இன்னும் பல வசதிகளை இலவசமாக உருவாக்கி தந்திருக்கிறார்கள்.
உங்களிடம் வெப்கமெராவும் ஒலியைப் பதிவு செய்யும் வசதியும் இருந்தால் Slow motion effects, Green Screen feature , வீடியோ கலரிங்க் போன்ற ஏராளமான வசதிகளுடன் வீடியோவை உருவாக்கவும் முடிகிறது.

இந்த தளத்தில் இலவசமாக பதிவு செய்வதன் மூலம் பின்வரும் வசதிகளை பெற்றுக்கொள்ளலாம். முகப்பில் தெரியும் டாப் வடிவமைப்பில் வீடியோ, படங்கள், ஆடியோ, எழுத்துக்கள், எபெக்ட்ஸ்கள் போன்றவற்றை தேர்வு செய்து வீடியோவை விரும்பிய வடிவில் இணைக்கவும் முடிகிறது.
இணைய முகவரி - http://jaycut.com/
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்
Category: Computer, software, Technology, மென்பொருள்
0 comments