உங்களிடம் உள்ள பெரிய கணினி கோப்புகளை சிறு சிறு துண்டுகளாக மாற்ற
-
சில காலமாக பெரிய கணினி கோப்புகளை எடுத்து செல்வதற்கு Pen Drives அல்லது DVD களை உபயோகிக்கிறோம். முக்கியமான நேரங்களில் மின்னஞ்சலில் அனுப்பவேண்டிய கோப்பின் அளவு அதிகமாக இருந்தால் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும். அந்த தருணங்களில் உங்களுக்கு உதவ ஒரு சிறிய விண்டோஸ் இலவச மென்பொருள் “File Splitter Lite” இருக்கிறது. பெரிய கோப்புகளை சிறு சிறு துண்டுகளாக மாற்றி மின்னஞ்சல்
அனுப்பலாம்.
File Splitter Lite வேகமாக செயல்படும், துண்டுகளாக மாற்ற பட்ட கோப்புகளை மீண்டும் எளிதாக இணைக்கலாம். இதன் இன்டர்பேஸ் உபயோகிக்க எளிதாக இருக்கும்.
கோப்பை பிரிக்க:
கோப்பை பிரிக்க ” Split tab “பில் சென்று உங்களுக்கு தேவைப்படும் கோப்பை கணினியில் இருந்து எடுக்கவும். பின் பிரிக்கப்படும் கோப்புகள் எங்கு சேமிக்க வேண்டும், அந்த இடத்தை தேர்வு செய்யவும். பிரிக்கப்படும் இடத்தில உங்கள் கோப்புகளை எவ்வளவு எண்ணிக்கை பிரிக்க வேண்டும் அல்லது கோப்புகளை KB, MB or GB அளவிற்கு பிரிக்க வேண்டும் என்பதை தேர்ந்து எடுக்க வேண்டும். இந்த அமைப்பை செய்த பிறகு “Split”பொத்தானை கிளிக் செய்யவும்.
கோப்பை இணைக்க:
கோப்பை இணைக்க ” Join tab “பில் சென்று உங்களுக்கு இணைக்க வேண்டிய கோப்பை கணினியில் இருந்து எடுக்கவும். பின் இணைக்க படும் கோப்புகள் எங்கு சேமிக்க வேண்டும், அந்த இடத்தை தேர்வு செய்யவும். இந்த அமைப்பை செய்த பிறகு “Join “பொத்தானை கிளிக் செய்யவும்.
File Splitter Lite கோப்புகளை பிரிப்பதையும் மற்றும் இணைப்பதையும் எளிதாக செய்யும். நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்.
Download File Splitter Lite
Category: software, Technology, கணணி தொழிநுட்பம், மென்பொருள்








0 comments