Watch Movies

product 1

Watch All Movies Online Tamil,Hindi,Telugu

Technology

product 1

Latest Technology

Software

product 1

Download All Software.

If you don't wish to play our radio when you enter our forum,Juz simply click on mute button.
Click Play Button Whenever Radio is Stopped!
WATCH TAMIL MOVIES
**********************************************************************************************************************
WATCH TAMIL DUBBED MOVIES
*****************************************
Loading...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out

KAAVALAN 2011- திரை விமர்சனம்

mathan | 12:26 PM | 0 comments



காவலன்
நடிக+நடிகைகள்:-"இளையதளபதி"விஜய், அசின், ராஜ்கிரண், "வைகைப்புயல்"வடிவேலு, வையாபுரி, "டெல்லி"கணேஷ், "நிழல்கள்"ரவி, எம்.எஸ்.பாஸ்கர், "பிதாமகன்"மகாதேவன், ரோஜா மற்றும் பலர்.

இசையமைப்பு:-வித்யாசாகர்

தயாரிப்பு:-ரொமேஷ்பாபு

திரைக்கதை+வசனம்+இயக்கம்:-சித்திக்



ராஜ்கிரண் ஊரில் ரொம்ப பெரிய மனிதர் அவரை பாதுகாக்க வரும் விஜய் ஒரு கட்டத்தில் அவரின் மகளுக்கு பாடிகார்டாக காலேஜூக்கு அவர்களுடன் ஸ்டுடண்டாக செல்கிறார்.அவரிடம் இருந்து தப்பிக்க அவரை காதலிப்பதாக சொல்லி போன் செய்கிறார் அசின்.விஜய் காதலிக்க ஒரு கட்டத்தில் அசினும் காதலிக்க ஆரம்பிக்கிறார் பிறகு காதலும் போராட்டமும் முடிவும் தான் கதை.

கதை கேட்க சூப்பராதான் இருக்கு முதல் 45 நிமிட படத்தில் ஏன்டா உள்ள வந்தோம்னு நினைக்க வைத்து விடுகிறார் டைரக்டர்.ஓபனிங்க் பாக்சிங்க பைட்டுக்கு பாங்காங் போறாராமா?? அதுலயும் விஜய் கைல பட்டு விழுந்தவர் எழமாட்டேங்றார்.நல்லவேளை பைட் முடிஞ்சதும் பாட்டு போட்டுடுவாங்கன்னு பயந்தது நடக்கவில்லை ஆனா தேவை இல்லாத ஒரு இடத்துல விண்ணைக்காப்பான் ஒருவன் வந்து காதை கிழிக்கிறான்.

சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கதைக்குள் வரும் வடிவேலுவுடன் விஜய் செய்யும் காமெடிகள் சில இடங்களில் சிரிப்பு பல இடங்களில் கடுப்போ கடுப்பு. விஜய் காலேஜ் போவதும் அதும் நெஞ்சை நிமிர்த்திகிட்டு நடக்கிறது அசினுக்கு மட்டும் அல்ல நமக்கே எரிச்சலை வர வைக்கிறது. அடப்போங்கப்பா..

படத்தின் இரண்டாம் பாதி ஆறுதல் ஆனாலும் வசனமோ காட்சிகளோ புதுமை எதுமே இல்லை.காதலியை சந்திக்க பொட்டானிக்கல் கார்டனில் நின்று அசினுடன் ஒத்திகை பார்த்த காட்சியை ஏற்கனவே விஜய் பூமிகாவுடன் பத்ரியில் பார்த்துவிட்டார்.அவ எப்படி உங்களுக்கு போன் பண்ணுவான்னு சொல்றீங்கன்னு அசின் கேட்க உண்மையான காதல் எப்பவும் பொய்யாகாதுன்னு சொல்லும் போது பக்கத்துல இருக்கவன் காதை கடிச்சுடலாமாங்கற அளவுக்கு கோபம் வருது. அசினின் அண்ணன் காதலும் ஒரு பைட்டும் கதையின் நீளத்திற்காக சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஸ்டெப் ஸ்டெப் பாடலும் & விண்ணைக்காப்பான் ஒருவனும் திணிக்கப்பட்டிருக்கிறது.வழக்கமாக விஜய் படத்தில் இருக்கும் துள்ளல் டான்ஸ் இந்த படத்தில் மிஸ்ஸிங்க் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த ஸ்டெப் ஸ்டெப் பாடல் டான்ஸ் சொதப்பல்.பைட்டும் அப்படியே சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

எல்லா படத்திலும் பார்த்த எக்ஸ்ப்ரஸன்ஸுடனே விஜய் வருகிறார்
கொஞ்சம் சதை போட்டு மேலும் அழகாக தெரிகிறார் அதும் கிளைமாக்ஸ் ஹேர் ஸ்டைல் அட்டகாசம் பாடல்காட்சிகளில் ஹேர்ஸ்டைல் அலங்கோலம்.அசின் சில இடங்களில் அழகாகவும் சில இடங்களில் குளோசப்பில் பயமுறுத்தவும் செய்கிறார்.ராஜ்கிரண், ரோஜா, எம் எஸ் பாஸ்கர் யாருக்குமே பெரிதாக வேலை இல்லை.

படத்திற்கு இசை வித்தியாசாகர் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி எதுமே இல்லை பின்னணி இசை இரைச்சலோ இரைச்சல்.அதுவும் வடிவேலுவுக்கு ஒரு பேக்ரண்ட் மீயூசிக் போட்டிருக்காரா !!
(அட! அட! சத்தியமா தாங்க முடியல) மேலும் இந்த படத்திற்கு எவ்வளவு யோசித்தாலும் பாசிட்டிவாக சொல்ல எதும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

படத்தின் க்ளைமாக்ஸ் எதிர்பார்க்காத ஒன்று.போன் காதலில் ஏற்படும் சின்ன சின்ன எதிர்ப்பார்ப்புகள் படத்தை லேசாக தூக்கி நிறுத்துகிறது.நல்ல கதையை தேர்வு செய்துவிட்டு மோசமான திரைக்கதையில் சறுக்கிவிட்டார் டைரக்டர் சித்திக்.வழக்கமான மசாலாக்களை விட்டு விட்டு நல்ல கதையை தேர்வு செய்ததற்கு
"விஜய்க்கு ஒரு பாராட்டு"



"காவலன் பொழுது போக்காகப் பார்க்கலாம்"
 KAAVALAN

Banner:-Eka Veera Creations
Cast:-Vijay, Asin, Raj Kiran, Roja, Vadivelu
Music:-Vidyasagar
Produced:-C.Romesh Babu
Directed:-Siddique
‘Kavalan’ is no doubt a different Vijay film. Yet, it is no different movie for it has got nothing big to offer but for Vijay’s terrific screen presence coupled with his neat performance and an emotional climax that comes with a twist.

Take away Vijay and Vadivelu (who provides relief in a few scenes), ‘Kavalan’ could make you squirm on seats, courtesy an outdated script and age-old style of narration. A few compromises to the original version (Malayalam hit ‘Bodyguard’) to suit the image of Vijay too fails to work big time.

In other words, ‘Kavalan’ could be a classic example of how a potent knot could be diluted in the name of making it a ‘commercially viable’ product. One good sign is that Vijay coming forward to be part of a project which doesn’t portray him as a demigod.

Coming to the story, Bhoominathan (Vijay), a carefree youngster, is made by his father (‘Nizhalgal’ Ravi) to join the household of Muthuramalingam (Rajkiran), a don-turned-do gooder in a village near Madurai, as a bodyguard.

As there is a threat to the life of Muthuramalingam’s daughter Meera (Asin), he asks Bhoominathan to accompany her to the college and provide security cover. As Meera feels Bhoominathan’s presence as a disturbance, she plays a prank on him, despite a warning from her friend Maadhu (Mithra Kurian).

Slowly, Meera falls for the charm and good heart of Bhoominathan and all hell breaks loose when Muthuramalingam, who never allows anyone deceive him, comes to know about this. What follows is a dragging climax, which however is emotional and touching.

Vijay is the real one-man army who saves the film to a great extent. It is his charm and performance that work big time in ‘Kavalan’. Asin is good but her much talked about chemistry with Vijay (in ‘Sivakasi’ and ‘Pokkiri’) is missing.

Vadivelu as Amavasai provides comic relief on very few occasions. Mithra Kurian, Rajkiran, Roja, KK, M S Bhaskar and ‘Pithamagan’ Mahadevan have performed well, but only have little scope as it is Vijay’s show all the way.

Vidyasagar is back with ‘Kavalan’ and his background score is good. So are a couple of songs. Cinematography by Ekambaram and editing by Gowri Shankar add value to the end product.

The script has many loopholes for there are many unanswered questions. One good example is that why ‘Pithamagan’ Mahadevan, who challenges to kill Asin at any cost, vanishes all of a sudden.

Siddique is a director with a magic touch in Malayalam. And in Tamil too, we have enjoyed his movies, especially ‘Friends’ with the same Vijay. However, as far as ‘Kavalan’ is concerned, we have to conclude the review with a dialogue oft-repeated by Vadivelu in the film- ‘Avarey confuse aayitaaru pola irukku…’




Category:

HI VIEWERS: If you enjoyed this post and wish to be informed whenever a new post is published, then make sure you subscribe to our regular Email Updates..!

0 comments

If you like any post feel free to post your comments. Please be noted that all Comments will be moderated by Mathandream Blog admin, before approving. So please post relevant comments only.

தமிழ்ல டைப் பண்ணனுமா

free counters