Watch Movies

product 1

Watch All Movies Online Tamil,Hindi,Telugu

Technology

product 1

Latest Technology

Software

product 1

Download All Software.

If you don't wish to play our radio when you enter our forum,Juz simply click on mute button.
Click Play Button Whenever Radio is Stopped!
WATCH TAMIL MOVIES
**********************************************************************************************************************
WATCH TAMIL DUBBED MOVIES
*****************************************
Loading...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out

கோடை காலத்தை சூடேற்ற வரும் ஹாலிவூட் படங்கள் : ஒரு பார்வை (டிரெயிலர் மற்றும் படங்கள் இணைப்பு)

mathan | 12:31 AM | 0 comments


கோடைகாலம் என்றாலே ஹாலிவூட் படங்களுக்கு பஞ்சமிருக்காது. அதுவும் இம்முறை டபிள் ட்ரிபிலாக குஷிப்படுத்த வருகிறது சில முக்கிய ஹாலிவூட் திரைப்படங்கள்.

இதில் குறிப்பிடத்தக்கது, நீண்ட தொடராக வெளிவந்த பல படங்களின் தொடர்பாகங்கள் போட்டிக்கு களமிறங்கியுள்ளன. இவற்றில் ரசிகர்களின் பல்ஸை எகிறவைக்கும் படங்கள் எவையாக இருக்கலாம் என கணிப்பிட்டு தரவரிசையில் ஒரு ஷார்ட் லிஸ்ட்

 

1. Harry Potter and Deathly Hallows : Part 2

ஹாரிபாட்டர் தொடரின் இறுதிப்பாகமாக வெளிவருவதால் ஹாரியின் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. வில்லன் வோல்டெமோர்ட் இறக்கின்றானா? அல்லது ஹரி கொல்லப்படுகின்றானா? என திரையில் காண ஜூலை 15ம் திகதிவரை பொறுத்துக்கொள்ளுங்கள்!
 
எப்போதும் போல ஜே.கே.ரோலிங்கின் நாவலை தழுவி, இயக்குனர் டேவிட் யேட்ஸ் இயக்கியிருக்கும் படமிது.



நீண்டநாட்களாக பலருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம். என்னதான் கிராபிக்ஸ் என்றாலும், இப்படத்திற்கான லொகேஷனை எங்கு செலெக்ட் பண்ணியிருப்பாங்கன்னு!


இதாங்க இடம்! எல்லாமே இங்கிலாந்துல தான்!

Freshwater West, Pembrokeshire, Wales, UK (beach scenes) Leavesden Studios, Leavesden, Hertfordshire, England, UK Pinewood Studios, Iver Heath, Buckinghamshire, England, UK மேக்கிங் :


 
2. X-Men : First Class

எக்ஸ் மென் குழுவினர் உருவாகிய ஆரம்பகட்ட வரலாற்றை சொல்ல போகிறார்கள்! கதை பின்னோக்கி நகரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷார்லெஸ் ஷவியெர் பாடசாலைக்கு செல்லத்தொடங்கிய போது தனது அமானுஷ்ய சக்திகளை உணர்ந்துகொள்ளும் திரைக்கதை. முக்கிய கதாபாத்திரங்களில் ஜெனிபர் லாரென்ஸ், மைக்கேல் ஃபாஸ்பெண்டர், ரோஸ் பியெர்ன் நடித்திருக்கின்றனர். ஜூன் 3, அமெரிக்காவில் ரிலீஸ்!

X-Men, X2 ஆகியவற்றை உருவாக்கிய ப்ரயன் சிங்கர் தான் இந்தப்படத்தையும் இயக்கவிருந்தார். ஆனால் இப்புதிய பாகத்தை இயக்கும் பொறுப்பை மதிவ் வோகன் கைப்பற்றிவிட்டார்.



 
3. Transformers: Dark of the Moon

Transformers திரைப்படத்தொடரில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம்! மைகெல் பேய் இயக்குகிறார். ஸ்டீவன் ஸ்பில்பேர்க் தயாரிக்கிறார். 3டியிலும் வருகிறது.

ஜூன் 1 முதலாம் திகதி வெளிவரும் இப்படத்தின் ட்ரெய்லரே படத்தை பார்க்கவேண்டுமென்ற விறுவிறுப்பை தூண்டிவிடும்.



கடந்த செப்டெம்பர் 2ம் திகதி, இப்படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த போது, இந்தியானாவில் வைத்து நடந்த ஒரு விபத்தில், கேப்ரியல்லோ செடில்லோ என்பவர் கடுமையாக காயமுற்றார். அவரது மூளையின் இடது புறம், கண் பகுதிகள் சேதமுற்றன. இதனால் அவருடைய மருத்துவ செலவுக்கு 350,000 அமெரிக்க டாலர்கள் வரை செலவழித்தது ட்ரான்ஸ்போர்மர்ஸ் படக்குழு. இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.


இப்படத்தின் மற்றுமொரு ட்ரெய்லர்

 
4. Kung Fu Panda 2

கோடை வெயிலுக்கு குச்சி ஐஸ்கிரீம் கொடுக்க போகும் படம் இது தாங்க. Kung Fu Panda பாகம் 2
 
படத்தின் நாயகனான Po, புதிய குங்ஃபூ மாஸ்டரிடம் பயிற்சிக்கு செல்கிறது. அவருடைய எதிரியை அழிப்பதற்காக! இடையில் படும் பாடு தான் கதை. நிச்சயம் காமெடிக்கு பஞ்சமிருக்காது.



Jennifer Yuh இயக்க, Jack Black, Angelina Jolie, Jackie Chan என நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்திருக்கிறார்கள். அதெப்படி கார்டூன் படத்தில்? என்று கேட்கிறீர்களா! வேறு எப்படி பின்னணி குரலால் தான்!


Tigress க்கு ஆஞ்சலினா ஜூலியும், Po வுக்கு ஜக் ப்ளேக்கும், Monkey க்கு Jackie Chan உம் குரல் கொடுத்திருக்கின்றனர். இத்திரைப்படம் இந்த மே மாதம் 26ம் திகதி வெளியாகிறது.

 
5. Pirates of the Caribbean : On Stranger Tides



பைரெட்ஸ் ஆஃஒ த கரிபியன் தொடரின் நான்காவது பாகம். மீண்டும் ஜானி டெப் கலக்கவருகிறார். எதிர்வரும் மே 20ம் திகதி படம் திரைக்கு வருகிறது.



இந்த ஐந்து படங்களுமே முன்னைய பாகங்களின் தொடர்கள் தான். எனவே முதன் முறையாக இந்த படங்களை பார்க்க போகிறவர்களுக்கு இலகுவில் புரியாது என்பதை கவனித்துக்கொள்ளவும்.


ஆனால் அடுத்து நாம் பார்க்க போகும் ஐந்து படங்களும், இப்படி தொடர்களாக வந்தவை அல்ல. முதன்முறையக திரை காணவிருக்கின்றன. அவற்றை பற்றி அலசுவதற்கு கொஞ்சம் பொருத்திருக்க..! 




IF U ARE LIKE MY POST ADD THANKS , AND REPLY
 

Category: ,

HI VIEWERS: If you enjoyed this post and wish to be informed whenever a new post is published, then make sure you subscribe to our regular Email Updates..!

0 comments

If you like any post feel free to post your comments. Please be noted that all Comments will be moderated by Mathandream Blog admin, before approving. So please post relevant comments only.

தமிழ்ல டைப் பண்ணனுமா

free counters